மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஆனது, ‘இந்தியாவில் பதிவான சாலை விபத்துகள் 2021’ என்ற வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளன.
இந்த விபத்துகளின் மூலம் 1,53,972 பேர் கொல்லப் பட்டனர்.
சுமார் 3,84,448 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு 12.6% அதிகரித்து உள்ளது.
2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.