TNPSC Thervupettagam
December 28 , 2017 2703 days 1016 0
  • பாட் டாக்ஸி [Pod Taxi] எனும் தனிப்பட்ட விரைவான போக்குவரத்து (Personal Rapid Transit) முறையினை இந்தியாவில் கட்டமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பரிந்துரைக்க ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் கடுமையான பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
  • தானியங்கி மக்கள் போக்குவரத்து அமைப்புகளுக்கான தரம் மற்றும் விவரக் குறிப்புகளுடன் மத்திய கொள்கைக் குழுவின் (நிதி ஆயோக்) பரிந்துரைகளோடு பிற பாதுகாப்பு அளவுருக்களையும் கொண்ட புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளலுக்கான அறிவிப்பாணையை (expression of interest) வெளியிட பரிந்துரைத்துள்ளது.
  • இத்திட்டம் பொது-தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் (public-private partnership) அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது.
  • இது தில்லி-ஹரியானா எல்லைப்பகுதியில் இருந்து குருகிராமத்தில் உள்ள ராஜீவ் சவுக் பகுதி வரை 12.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு டெல்லி-குருகிராமம் பெருவழியில் முன்முயற்சியாக அமைக்கப்படவுள்ளது.
  • இவ்வகை போக்குவரத்து அமைப்பு இங்கிலாந்தில் இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து மோர்கன் டவுன் வழியாக மாஸ்தார் நகரம் வரை இயங்குகின்றது.
தனிப்பட்ட விரைவான போக்குவரத்து
  • இது அதிநவீன பொது போக்குவரத்து முறையாகும். பாட் (Pod) டாக்ஸி எனப்படும் மின்சக்தியில் இயங்கும்    இவை சிறிய பயணிகள் குழுவை இரு இடங்களுக்கு இடையே முன்னும் பின்னும் அழைத்துச் செல்லும்.  மேலும்  பயணிகளின் தேவைக்கேற்ப செயல்படும்..
  • இது மின்சார சக்தியில் இயங்கும். இவை ஓர் தடையற்ற பசுமை வழிப் போக்குவரத்து முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்