TNPSC Thervupettagam

இந்தியாவில் பாராகுவாட் டைகுளோரைடுக்கு தடை

July 21 , 2026 4 days 102 0
  • பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968-இன் கீழ், நச்சுத்தன்மை தொடர்பான இறப்புகளுடன் தொடர்புடைய 'பாராக்குவாட் டைகுளோரைடு' (Paraquat Dichloride) என்ற களைக் கொல்லிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  • இந்தத் தடையானது, இந்தியாவில் பாராக்குவாட் டைகுளோரைடு தயாரிப்பு, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்கிறது.
  • சுகாதார அபாயங்கள், அதிக இறப்பு விகிதங்கள் மற்றும் அதற்கான குறிப்பிட்ட மாற்று மருந்து இல்லாமை ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி பதிவுக் குழு மற்றும் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.
  • பாராக்குவாட் டைகுளோரைடு ஏற்கனவே உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • அறுவடைக்குப் பிறகு களை கட்டுப்பாட்டிற்காக விவசாயிகளால் இந்த களைக் கொல்லி பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது ஆனால் இதன் மூலம் ஏற்படும் நச்சுத் தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்