TNPSC Thervupettagam

இந்தியாவில் புதிய ராம்சர் தளங்கள்

October 18 , 2026 4 days 95 0
  • சண்டிகரின் சுக்னா சதுப்புநிலம் மற்றும் உத்தரபிரதேசத்தின் சௌஜ் ஜீல் ஆகியவை ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இந்தியாவின் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
  • ராம்சர் ஒப்பந்தம் என்பது 1971 ஆம் ஆண்டில் ஈரானின் ராம்சரில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, 1975 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • ராம்சர் தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாகும், அவை பல்லுயிர் பெருக்கம், நீர் பாதுகாப்பு, வெள்ளக் கட்டுப்பாடு, பருவநிலை ஒழுங்குமுறை மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை ஆதரிக்கின்றன.
  • சண்டிகரில் உள்ள வெளி இமயமலையின் அடிவாரத்தில் சுக்னா சதுப்புநிலம் அமைந்துள்ளது.
  • கங்கை நதியின் வெள்ளப் பெருக்குச் சமவெளியில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் சௌஜ் ஜீல் (Sauj Jheel) அமைந்துள்ளது.
  • இந்தியா 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ராம்சர் ஒப்பந்தத்தில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்