TNPSC Thervupettagam

இந்தியாவில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம்

June 27 , 2026 13 hrs 0 min 23 0
  • இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசத்தில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தற்போது எட்டு மாநிலங்கள் மற்றும் ஒரு ஒன்றியப் பிரதேசம் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்குகின்றன என்பதோடு இதற்கான தகுதி விதிகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.
  • தமிழ்நாடு, மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை இத்திட்டத்திற்குத் தகுதியான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகும்.
  • பெரும்பாலான மாநிலங்கள் பயணிகளின் அடையாளத்தை சரிபார்த்த பிறகு, பயணப் பதிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டை வழங்கச் செய்கின்றன.
  • சில மாநிலங்கள் தகுதியான பயணிகளை சரிபார்க்கவும், கட்டணமில்லா பயணச் சீட்டுகளை வழங்கவும் திறன் அட்டைகள் அல்லது QR குறியீடு அடிப்படையிலான அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இந்தத் திட்டங்கள் பொதுவாக அரசு நடத்தும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும், அதே சமயம் பல மாநிலங்களில் உயர்தர, சொகுசு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு இத்திட்டம் விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு, டெல்லி, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் திருநங்கைகளுக்கும் இச்சலுகையை விரிவுபடுத்தியுள்ளன, அதே வேளையில் தமிழ்நாடு இத்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளையும் கூடுதலாக இணைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்