இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலை 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிகாட்டிகள் மற்றும் தரவுகள் என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது இந்தியாவில் பல்வேறு துறைகளில் பாலினம் தொடர்பான குறிகாட்டிகளின் மீது ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான ஒரு வழக்கமான நிலையிலான தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது (LPFR) சுமார் 49.8 சதவீதத்திலிருந்து (2017-18) 60.1% (2023-24) ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து வங்கிக் கணக்குகளிலும் 39.2% கணக்குகளைப் பெண்கள் வைத்துள்ளனர் மேலும் மொத்த வைப்புத்தொகையில் அவர்கள்39.7% பங்கினை அளிக்கிறார்கள்.
கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் 42.2% பங்குடன் பெண்களின் பங்களிப்பு ஆனது கிராமப்புறங்களில் மிக அதிகமாக உள்ளது.
ஆண்களின் DEMAT கணக்குகளின் ஒரு எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் சுமார் 26.59 மில்லியனில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 115.31 மில்லியனாக உயர்ந்துள்ளது.
அதே காலக் கட்டத்தில் பெண்களின் DEMAT கணக்குகள் 6.67 மில்லியனில் இருந்து 27.71 மில்லியனாக அதிகரித்துள்ளது.
1952 ஆம் ஆண்டில் 173.2 மில்லியனாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆனது, 2024 ஆம் ஆண்டில் 978 மில்லியனாக அதிகரித்தது.
2019 ஆம் ஆண்டில் 67.2% ஆகிய இருந்த பெண் வாக்காளர் எண்ணிக்கையானது, 2024 ஆம் ஆண்டில் 65.8% ஆக சற்று குறைந்து பல ஆண்டுகளாக மாறுபட்டு வருகிறது.