TNPSC Thervupettagam

இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2024

April 10 , 2025 20 days 63 0
  • இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் நிலை 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிகாட்டிகள் மற்றும் தரவுகள் என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது இந்தியாவில் பல்வேறு துறைகளில் பாலினம் தொடர்பான குறிகாட்டிகளின் மீது ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான ஒரு வழக்கமான நிலையிலான தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் ஆனது (LPFR) சுமார் 49.8 சதவீதத்திலிருந்து (2017-18) 60.1% (2023-24) ஆக அதிகரித்துள்ளது.
  • அனைத்து வங்கிக் கணக்குகளிலும் 39.2% கணக்குகளைப் பெண்கள் வைத்துள்ளனர் மேலும் மொத்த வைப்புத்தொகையில் அவர்கள்39.7% பங்கினை அளிக்கிறார்கள்.
  • கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் 42.2% பங்குடன் பெண்களின் பங்களிப்பு ஆனது கிராமப்புறங்களில் மிக அதிகமாக உள்ளது.
  • ஆண்களின் DEMAT கணக்குகளின் ஒரு எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் சுமார் 26.59 மில்லியனில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 115.31 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • அதே காலக் கட்டத்தில் பெண்களின் DEMAT கணக்குகள் 6.67 மில்லியனில் இருந்து 27.71 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் 173.2 மில்லியனாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஆனது, 2024 ஆம் ஆண்டில் 978 மில்லியனாக அதிகரித்தது.
  • 2019 ஆம் ஆண்டில் 67.2% ஆகிய இருந்த பெண் வாக்காளர் எண்ணிக்கையானது, 2024 ஆம் ஆண்டில் 65.8% ஆக சற்று குறைந்து பல ஆண்டுகளாக மாறுபட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்