உலகளவில் நிறுவனங்களில் பெண் உறுப்பினர்களை கொண்ட தலைமைக் குழுவின் பட்டியலில் இந்தியா 12 வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய ஆட்சேர்ப்பு தளமான MyHiringClub.com மற்றும் Sarkari-Naukri.info ஆகியவற்றால் 'வுமன் ஆன் போர்டு 2020' என்பது குறித்த ஒரு சமீபத்திய ஆய்வு இதுவாகும்.
பட்டியலிடப்பட்ட இந்த 628 நிறுவனங்களில், 55 சதவீதம் பெண் இயக்குநர்களைக் கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 14 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஒரு வாரியத்தில் பணியாற்றும் ஆண் இயக்குநர்களின் சராசரி பதவிக் காலமானது மூன்று ஆண்டுகள் ஆகும். இது அவர்களுக்கு இணையாகப் பணியாற்றும் பெண்கள் இயக்குநர்களின் பதவிக்காலத்தை விட அதிகமாகும்.
ஆசியாவில் சுமார் 54 சதவீத ஊழியர்களும், இந்தியாவில் 39 சதவீத ஊழியர்களும் பெண்கள் ஆவர். ஆனால் அந்த எண்ணிக்கையில் ஒரு பகுதியினர் மட்டுமே நடுத்தர மற்றும் தலைமை நிர்வாக நிலைக்கு வருகிறார்கள்.
இந்தப் பட்டியலில் நார்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.