PREVIOUS
2016-18 ஆம் காலகட்டத்திற்கான இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் (MMR - Maternal Mortality Rate) குறித்த ஒரு சிறப்பு அறிக்கையானது மாதிரிப் பதிவுகள் முறை அலுவலகத்தின் தலைமைப் பதிவாளரால் (SRS - Sample Registration System) வெளியிடப் பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் MMR ஆனது 2014-16ல் 130 மற்றும் 2015-17ல் 122 என்ற அளவுகளிலிருந்து 2016-18 ஆம் காலகட்டத்தில் 113 என்ற அளவாகக் குறைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் (65), தெலுங்கானா (63), கர்நாடகா (92), கேரளா (43) மற்றும் தமிழ்நாடு (60) ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் குறைவான MMR அளவினைப் பதிவு செய்துள்ளன.
அசாம் (25), பீகார் (149), மத்தியப் பிரதேசம் (173), சத்தீஸ்கர் (159), ஒடிசா (150), இராஜஸ்தான் (164), உத்தரப் பிரதேசம் (197) மற்றும் உத்தரகாண்ட் (99) ஆகிய வட இந்திய மாநிலங்கள் அதிக MMR அளவினைப் பதிவு செய்துள்ளன.
MMR என்பது பிறக்கும் 1,00,000 குழந்தைகளுக்கு ஏற்படும் பேறுகால இறப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.