TNPSC Thervupettagam

இந்தியாவில் பொதுமக்களின் அதிகப்படியான மருத்துவச் செலவுகள்

May 30 , 2026 13 hrs 0 min 22 0
  • சமீபத்திய தேசிய சுகாதார கணக்கு (NHA) மதிப்பீடுகள் 2022-23 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் மக்கள் இன்னும் தங்கள் சொந்த பணத்தில் இருந்து சுகாதாரத்திற்காக மிக அதிக தொகையை செலவிடுகிறார்கள் என்பதை காட்டுகிறது.
  • இந்தியாவில் நடப்பு சுகாதார செலவினங்களில் (CHE) கிட்டத்தட்ட 50% பொதுமக்களின் சொந்த செலவினங்களாக (OOPE) உள்ளன.
  • அரசு சுகாதார செலவினம் (GHE) 2013-14 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.15% ஆக இருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 1.48% ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் பொது சுகாதார செலவினம் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்கான 2.5% ஆகியவற்றிற்கும் குறைவாகவே உள்ளது.
  • சுகாதாரச் செலவினங்களில் தனியார் மருத்துவமனைகளின் பங்கு மிக அதிகமாக 30.83% ஆகவும், நோய்த்தடுப்பு சுகாதார செலவினம் நடப்பு சுகாதார செலவினங்களில் (CHE) 8.88% ஆக மட்டுமே உள்ளது.
  • மாநில அரசுகள் மொத்த அரசு சுகாதார செலவினத்தில் 63% க்கும் மேல் பங்களித்து உள்ளன அதே நேரத்தில் அரசு நிதியுதவி பெறும் காப்பீட்டுத் திட்டங்களை விட தனியார் மருத்துவக் காப்பீட்டுச் செலவு அதிகமாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்