TNPSC Thervupettagam

இந்தியாவில் மக்கள்தொகை மாற்றம்

January 28 , 2026 3 days 57 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) “மாநில நிதிநிலை: 2025-26 வரவுசெலவுத் திட்டங்களின் ஒரு ஆய்வு” என்ற அறிக்கையானது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றத்தை எடுத்துரைக்கிறது.
  • இந்தியாவின் சராசரி வயது சுமார் 28 ஆண்டுகளாகும் என்ற நிலையில் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை வரலாறு காணா உச்சத்தில் உள்ளது.
  • பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இளம் மக்கள்தொகையின் பங்கு அதிகமாக உள்ளது என்ற நிலையில் இது வளர்ச்சி வாய்ப்புகளை மேலும் உருவாக்குகிறது.
  • கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற நிலையில் தொழிலாளர் சக்தி குறைந்து வருகிறது என்பதோடு மேலும் ஓய்வூதியம் மற்றும் வட்டிச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
  • முதியோர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்கள், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) நிகரான அதிக கடன் விகிதங்களையும், வருவாய் வரவுகளுக்கு நிகரான அதிக வட்டி செலுத்தும் விகிதங்களையும் எதிர்கொள்கின்றன.
  • இளம் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்யவும், வயதான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நெகிழ்வான வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவும் ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்