சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICRIER) "Healing Soils in India: For Better Crop Health and Human Nutrition" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மண் சீரழிவுக்கு முக்கியக் காரணங்களில் யூரியாவின் அதிகப்படியான பயன்பாடு, தீவிர விவசாயம், ஒற்றைப் பயிர் சாகுபடி, எச்சங்களை எரித்தல் மற்றும் நெல் வயல்களில் நீர் தேக்கம் ஆகியவை அடங்கும்.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.3 பில்லியன் டன் மேலடுக்கு மண்ணையும், 5.4–8.4 மில்லியன் டன் ஊட்டச்சத்துக்களையும் அரிப்பு காரணமாக இழக்கிறது.
மண் தரவீழ்ச்சியானது பயிர்களின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைத்து, பயிர்களின் தரத்தைக் குறைக்கிறது என்ற நிலையில் மேலும் துத்தநாகம், இரும்பு மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகளால் குழந்தைகளில் மறைநிலை பசியை ஏற்படுத்துகிறது.
மண் வள அட்டை திட்டம், PM-PRANAM, பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் வேம்பு பூசப்பட்ட யூரியா போன்ற திட்டங்கள் மூலம் அரசாங்கம் மண் வளத்தை மேம்படுத்துகிறது.