TNPSC Thervupettagam

இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஏற்படும் உயிரிழப்புகள்

July 24 , 2026 3 days 30 0
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது 332 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாடு 38 உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. இது மகாராஷ்டிரா (58) மற்றும் அரியானாவுக்கு (47) அடுத்தப படியாக நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துவதைத் தடை செய்கிறது மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வை வழங்குகிறது.
  • மனிதக் கழிவுகளை அள்ளுவோராகப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் (தடை) சட்டம், 1993 என்பது மனிதக் கழிவுகளை அள்ளுவதையும் உலர் கழிப்பறைகள் கட்டுவதையும் தடைசெய்த முதல் மத்திய சட்டமாகும்.
  • இந்திய உச்ச நீதிமன்றம் (2023), கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதை முழுமையாக இயந்திரமயமாக்கவும், பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்