2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், மருத்துவ நோக்கங்களுக்காக 1,31,856 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் (FTA) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் மொத்த பயணிகள் எண்ணிக்கையில் சுமார் 4.1 சதவீதம் பேர் மருத்துவ நோக்கம் சார் சுற்றுலாப் பயணிகளாக இருந்தனர்.
"Heal in India" முன்னெடுப்பினை ஊக்குவிப்பதற்காக பொது தனியார் கூட்டாண்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ வசதி பெறுவதற்கான வருகைகளை எளிதாக்குவதற்காக 171 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு மின்னணு/இயங்கலை வழி மருத்துவ நுழைவு இசைவுச் சீட்டு மற்றும் இயங்கலை வழி மருத்துவ உதவியாளர் நுழைவு இசைவுச் சீட்டு வசதிகளை வழங்குகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கான முன்னணி மூல நாடுகளாக வங்காளதேசம், ஈராக், சோமாலியா, ஓமன் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை உள்ளன.
2024 ஆம் ஆண்டில் 4,82,336 மருத்துவச் சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் வங்காளதேசம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
2020 ஆம் ஆண்டில் 1,82,945 எண்ணிக்கையாக இருந்த மருத்துவ நோக்கங்களுக்கான மொத்த FTA எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 6,44,387 ஆக அதிகரித்துள்ளன.