இந்தியாவில் குளிப்பதற்குத் தகுதியற்ற நதிப் பகுதிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 815 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 807 ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
லிட்டருக்கு 30 மி.கி என்ற அளவிற்கு மேலான உயிரிய உயிரிவளி/ஆக்ஸிஜன் தேவை (BOD) கொண்ட முன்னுரிமை 1 ஆக வகைப்படுத்தப்பட்ட 'மிகவும் மாசுபட்ட' நதிப் பகுதிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 45 ஆக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 37 ஆகக் குறைந்தது.
2023 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அதிக மாசுபட்ட நதிப் பகுதிகள் (54) இருந்தன என்ற நிலையில் அதைத் தொடர்ந்து கேரளா (31), மத்தியப் பிரதேசம் (18), மற்றும் மணிப்பூர் (18) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அவசரச் சீரமைப்பு தேவைப்படும் முன்னுரிமை 1 நதிப் பகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை (தலா ஐந்து) தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட 4,736 இடங்களில் உள்ள நீர் தரத்தை CPCB கண்காணிக்கிறது.