இந்தியாவில் முன்னெப்போதும் பதிவாகாத வெப்பமான ஆண்டு 2024
May 6 , 2025 105 days 127 0
2024 ஆம் ஆண்டில், வருடாந்திர சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலையானது நீண்ட கால சராசரியை விட (1991-2020) +0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
1901 ஆம் ஆண்டில் நாடு முழுவதுமான வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப் பட்டதில் இருந்து பதிவான மிகவும் வெப்பமான ஆண்டு இதுவேயாகும்.
இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட +0.54 டிகிரி வெப்பநிலையை விட அதிகம் ஆகும்.
கிழக்குக் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலை சூழல்கள் காணப்பட்டன அதே நேரத்தில் மே மாதத்தில், அவை வடமேற்கு இந்தியா முழுவதும் பரவலாக நிலவின.
ஜூன் மாதத்தில், வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் நிலவின.
2024 ஆம் ஆண்டில், நவம்பர் மாதத்தின் அதிகபட்ச மாதாந்திர வெப்பநிலையானது, 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்ப நிலையாகும்.