TNPSC Thervupettagam

இந்தியாவில் முன்னெப்போதும் பதிவாகாத வெப்பமான ஆண்டு 2024

May 6 , 2025 38 days 55 0
  • 2024 ஆம் ஆண்டில், வருடாந்திர சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலையானது நீண்ட கால சராசரியை விட (1991-2020) +0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
  • 1901 ஆம் ஆண்டில் நாடு முழுவதுமான வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப் பட்டதில் இருந்து பதிவான மிகவும் வெப்பமான ஆண்டு இதுவேயாகும்.
  • இது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட +0.54 டிகிரி வெப்பநிலையை விட அதிகம் ஆகும்.
  • கிழக்குக் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில், ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலை சூழல்கள் காணப்பட்டன அதே நேரத்தில் மே மாதத்தில், அவை வடமேற்கு இந்தியா முழுவதும் பரவலாக நிலவின.
  • ஜூன் மாதத்தில், வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் நிலவின.
  • 2024 ஆம் ஆண்டில், நவம்பர் மாதத்தின் அதிகபட்ச மாதாந்திர வெப்பநிலையானது, 1901 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் பதிவான இரண்டாவது அதிகபட்ச வெப்ப நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்