TNPSC Thervupettagam

இந்தியாவில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள்

November 22 , 2026 8 days 129 0
  • 11 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் ‘முழு எழுத்தறிவு பெற்றவை’; வயது வந்தோர் கற்பவர்கள் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது.
  • ULLAS–நவ பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள பதினொரு மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் "முழு எழுத்தறிவு" அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
  • அதே சமயம், வயது வந்தோர் கற்பவர்கள் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது.
  • ஒரு மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் வயது வந்தோர் எழுத்தறிவு விகிதம் (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) 95% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்போது, அது "முழு எழுத்தறிவு பெற்றதாக" அறிவிக்கப்படுகிறது. இதில் வாசிப்பு, எழுத்து, எண்ணறிவு மற்றும் முக்கிய வாழ்க்கைத் திறன்கள் அடங்கும்.
  • ULLAS திட்டம்: 2022–23 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், 2027-ஆம் ஆண்டுக்குள் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எழுத்தறிவற்ற 5 கோடி பேரை எழுத்தறிவு பெறச் செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • FLNAT என்பது ULLAS திட்டத்தின் கீழ் கற்பவர்களின் வாசிப்பு, எழுத்து மற்றும் எண்ணறிவுத் திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு வழிமுறையாகும்.
  • அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு (FLNAT) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.
  • பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 2022-23 ஆம் ஆண்டு முதல் உல்லாஸ்–நவ் பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
  • தேசிய கல்விக் கொள்கை 2020-ஐத் தொடரும் வகையில், இத்திட்டம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எழுத்தறிவற்ற நபர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 74.04% ஆக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதத்தை, இத்திட்டம் 81.1% ஆக உயர்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்