TNPSC Thervupettagam

இந்தியாவில் மேலும் 2 ராம்சர் தளங்கள்

February 3 , 2026 3 hrs 0 min 28 0
  • உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள சாரி-தாந்த் ஆகியவை இந்தியாவின் ராம்சர் வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இது இந்தியாவின் மொத்த ராம்சர் தளங்களின் எண்ணிக்கையை 98 ஆக உயர்த்தும்.
  • ஈரானின் ராம்சர் நகரில் 1971-ல் கையெழுத்திடப்பட்ட, ராம்சர் மாநாடு என அழைக்கப்படும் சதுப்பு நிலங்கள் மீதான மாநாட்டின் ஒப்பந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்தியா 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த மாநாட்டில் கையெழுத்திட்டது.
  • இந்தியாவில் குஜராத் மாநிலம் தான் அதிக சதுப்பு நிலப் பரப்பைக் கொண்டுள்ளது; இது நாட்டின் மொத்த சதுப்பு நிலங்களில் 20% க்கும் அதிகமானதைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு (20) அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டின் சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி, இந்திய அரசாங்கத்தின் சதுப்பு நிலங்களுக்கான வரையறையில், ஆற்றுப் படுகைகள், நெல் வயல்கள் அல்லது வணிக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பிற பகுதிகள் ஆகியவை அடங்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்