TNPSC Thervupettagam

இந்தியாவில் வறுமை

October 30 , 2025 16 hrs 0 min 22 0
  • 2014 ஆம் ஆண்டில், இரங்கராஜன் குழுவானது வறுமைக் கோட்டினை (வரம்பினை) கிராமப்புறங்களுக்கு மாதத்திற்கு 972 ரூபாயாகவும், நகர்ப்புறங்களுக்கு மாதத்திற்கு 1,407 ரூபாயாகவும் நிர்ணயித்தது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்த அளவீட்டின்படி சுமார் 29.5 சதவீத இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தனர்.
  • 2022–23 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினக் கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தி 20 முக்கிய மாநிலங்களுக்கான வறுமை சார்ந்த மதிப்பீடுகளை இந்திய ரிசர்வ் வங்கி புதுப்பித்தது.
  • ஒடிசாவில் கிராமப்புற வறுமையானது 47.8 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகவும், பீகாரில் நகர்ப்புற வறுமை 50.8 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
  • ஊட்டச்சத்து, பள்ளிப்படிப்பு, சுகாதாரம், மின்சாரம் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 12 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தற்போது பல பரிமாண வறுமையை அளவிடுகிறது.
  • இந்தியாவில் 2013–14 ஆம் ஆண்டில் 29.17 சதவீதமாக இருந்த பல பரிமாண வறுமை னது 2022–23 ஆம் ஆண்டில் 11.28 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்