இந்தப் புதிய ஆய்வறிக்கையை, கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் பதினாறாவது நிதி ஆணையத் தலைவருமான அரவிந்த் பனகாரியா மற்றும் பிறர் தயாரித்தனர்.
2011-12 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியா தீவிர வறுமை நிலையை "முற்றிலும் ஒழித்துள்ளது".
2011-12 ஆம் ஆண்டில் 21.9% (மக்கள் தொகையில்) ஆக இருந்த தேசிய வறுமை விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 2.3% ஆகக் குறைந்துள்ளது.
இது 12 ஆண்டுகளில் 19.7 சதவீதப் புள்ளிகள் அல்லது ஆண்டிற்கு 1.64 சதவீதப் புள்ளிகள் சரிவு ஆகும்.
உலக வங்கியானது, தீவிர வறுமை நிலையை வாங்கும் சக்தி சமநிலை (PPP) அடிப்படையில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான வருவாயுடன் வாழ்வது என்று வரையறுக்கிறது.
இந்தப் பேராசிரியர்களின் கூற்றுப்படி, இது கடைசியாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட வறுமைக் கோடான டெண்டுல்கர் வறுமைக் கோட்டிற்கு அருகில் உள்ளது.
டெண்டுல்கர் முறையை அடிப்படையாகக் கொண்ட தேசிய (கிராமப்புற+நகர்ப்புற) வறுமைக் கோடு 2011-12 ஆம் ஆண்டில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 932 ரூபாயாகவும், 2022-23 ஆம் ஆண்டில் 1,714 ரூபாய் ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 1,804 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்துக்களிடையே வறுமை விகிதம் 2.3% ஆகவும், முஸ்லிம்களுக்கு இது 1.5% ஆகவும், கிறிஸ்தவர்களுக்கு 5% ஆகவும், பௌத்தர்களுக்கு 3.5% ஆகவும், சீக்கியர்கள் மற்றும் சமணர்களுக்கு 0% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.