இந்திய அரசு, ஒரு மத்தியத் துறைத் திட்டத்தின் கீழ் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் பணியை நிறைவு செய்துள்ளது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கூட்டு உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றில் ஆதரவளிப்பதற்காக இந்தத் திட்டம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 அன்று தொடங்கப்பட்டது.
இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் மொத்தம் 21.96 லட்சம் பெண் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளில், சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (SFAC), தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD), தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஆகியவை அடங்கும்.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறந்த வருமானத்திற்காக நிதி உதவி, கடன் உத்தரவாதங்கள், சந்தை இணைப்புகள் மற்றும் முறையான பயிற்சிகளைப் பெறுகின்றன.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விவசாயிகள் சுமார் 22% அதிக விலையைப் பெறவும், சந்தைப்படுத்தல் செலவுகளை சுமார் 31% குறைக்கவும் உதவுகின்றன என்று ஆதாரங்கள் உள்ளன.