TNPSC Thervupettagam

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள்

January 7 , 2026 2 days 40 0
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலை விகிதங்கள் பதிவாகியுள்ளன என்பதோடு இது தேசிய சராசரியை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்.
  • 1995 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் 394,206 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • அனைத்து விவசாயிகளின் தற்கொலைகளில் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பங்கு சுமார் 72.5% ஆகும்.
  • Bt பருத்தியின் விரைவான பரவல் மற்றும் தொடர்ச்சியான பயிர் சாகுபடி வீழ்ச்சிகள் விவசாயிகள் மத்தியில் நிதி சார் நெருக்கடியை அதிகரித்தன.
  • தற்கொலைகளில், தற்போது வேளாண் தொழிலாளர்களின் பங்கு, குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் விவசாயிகளை விட அதிகமான எண்ணிக்கையில் உள்ளது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA), பயிர்க் காப்பீடு மற்றும் கடன் தள்ளுபடி ஆகியவை 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர்களின் தற்கொலைகளைக் குறைக்க உதவியது.
  • 2023 ஆம் ஆண்டில், இந்தியாவில் 10,786 விவசாயிகளின் தற்கொலைகள் பதிவாகி உள்ளன என்பதோடு இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 75% அதிகம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்