TNPSC Thervupettagam

இந்தியாவில் வெறிநாய்க் கடி நோய்ப் பாதிப்பு நெருக்கடி

December 30 , 2025 15 hrs 0 min 41 0
  • உலகில் வெறிநாய்க் கடி நோய்ப் பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிற்குள் பதிவாகிறது.
  • இதன் விளைவாக, தடுக்கக்கூடிய இந்த நோயால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்படும் நாடாக இது உள்ளது.
  • வெறிநாய்க் கடி நோய் என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டு வரை நரம்புகள் வழியாக பயணிக்கும் ஒரு நரம்பு நாட்ட/நியூரோட்ரோபிக் வைரஸால் ஏற்படுகிறது.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20,000 பேர் இந்த வெறிநாய்க் கடி நோய்ப் பாதிப்பினால் இறக்கின்றனர் என்பதோடு இதனால் பாதிக்கப்பட்டப் பெரும்பாலான மக்கள் கிராமப் புறங்களிலும் மிகவும் குறைந்த வருமானம் உள்ள சமூகங்களிலும் வாழ்கின்றனர்.
  • 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதோடு சுதந்திரமாக சுற்றித் திரியும் நாய்கள், 80 மில்லியன் ஆக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் பேரை அவை கடிக்கச் செய்ன்றன / அல்லது கடிகளுக்கு அவை காரணமாகின்றன.
  • இந்தியா ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 மில்லியன் வெறிநாய்க் கடி நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை (ARV) உற்பத்தி செய்கிறது, ஆனால் 60 மில்லியன் தடுப்பூசிகளின் தேவை உள்ளது என்பதோடு இது மருத்துவமனைகளில் பற்றாக்குறை மற்றும் சிகிச்சை தாமதங்களுக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்