இந்தியாவில் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியல்
July 3 , 2018 2730 days 878 0
மாநில அரசுக்குச் சொந்தமான NTPC(National Thermal Power Corporation) ஆற்றல் நிறுவனம் 2018 -ம் ஆண்டின் இந்தியாவின் வேலை செய்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் 25-வது இடத்தினைப் பிடித்துள்ளது.
முதல் 25 இடங்களில் உள்ள ஒரே பொது நிறுவனம் NTPC ஆகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் 38-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
10 வருடங்களாக பட்டியல் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வருவதற்காக NTPC நிறுவனம் ஒரு சிறந்த அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
வேலை செய்வதற்காக சிறந்த இடங்களின் பட்டியலான இந்த வருடாந்திர அங்கீகாரமானது மக்களின் மேம்பாட்டிற்கான பயிற்சிகளின் அடிப்படையில் சிறந்த வேலை இடங்களை வரையறுத்தல், மதிப்பிடுதல் மற்றும் அங்கீகரித்தல் ஆகியவற்றுக்கான பொன்னான சான்றளிப்பாகக் கருதப்படுகிறது.