சமீபத்தில் நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவை மாற்றும் பெண்கள் (Women Transforming India - WTI) என்ற விருதுகளின் நான்காவது பதிப்பை ஏற்பாடு செய்தது.
2019 ஆம் ஆண்டின் WTI விருதுகளுக்கு 2,300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் முதல் 30 விண்ணப்பங்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டன.
WTI விருதுகளானது இந்தியாவில் உள்ள பெண் தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஆகியோரின் பாராட்டத்தக்க மற்றும் பெரு முயற்சிகளை முன்னிலைப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக்கின் ஒரு முன் முயற்சியாகும்.
2018 ஆம் ஆண்டு முதல், தொழில்முனைவோர் மீது சிறப்புக் கவனம் செலுத்தி நிதி ஆயோக்கின் பெண் தொழில்முனைவோர்கள் பிரிவின் கீழ் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.