TNPSC Thervupettagam

இந்தியா–பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மை

June 14 , 2026 15 hrs 0 min 39 0
  • 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரான்ஸ் இந்தியாவை ஒரு முக்கிய உத்திசார் முன்னுரிமை நாடாக அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தியா மற்றும் பிரான்ஸ் 1998-ஆம் ஆண்டில் பாதுகாப்பு, விண்வெளி, கடல்சார் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்தின.
  • 2026-ஆம் ஆண்டில் G7 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் வகிக்கிறது.
  • ரஃபேல் திட்டம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் முன்னெடுப்பு குறித்த ஒத்துழைப்பு விவாதங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026-இன் கீழ் பாரத் இன்னோவேட்ஸ் என்ற புத்தொழில் மற்றும் புத்தாக்க தளத்தை தலைவர்கள் தொடங்கி வைப்பார்கள்.
  • இந்தியாவானது அழைக்கப்பட்ட கூட்டாளராகவும், உலகளாவிய தெற்கின் முன்னணி குரலாகவும் G7-இன் அனைத்து தொடர்பு தடங்களிலும் பங்கேற்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்