TNPSC Thervupettagam

இந்தியா–பிரான்ஸ் தொழில்நுட்ப வழித்தடம்

June 18 , 2026 15 hrs 0 min 31 0
  • பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ உச்சிமாநாட்டின் போது இந்தியா-பிரான்ஸ் ATL (அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்) இணைப்பு அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது இந்தியா மற்றும் பிரான்சின் பள்ளி அளவிலான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களை இணைக்கும் இருதரப்பு கல்வி மற்றும் தொழில்நுட்ப வழித்தடமாகும்.
  • இது அடல் புத்தாக்கத் திட்டம், நிதி ஆயோக் மற்றும் லா ஃபோண்டேஷன் டசால்ட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம் நிறுவப்பட்டது.
  • பள்ளி மாணவர்களிடையே ஆரம்பகட்ட பொறியியல், அறிவியல் மனப்பான்மை மற்றும் வடிவமைப்பு சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவின் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) மாதிரியின் அடிப்படையில் பிரான்சின் முதல் பள்ளி புத்தாக்க ஆய்வகத்தை நிறுவும் மற்றும் இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு (AI), 3D அச்சிடுதல் மற்றும் நுண்மின்னணுவியல் போன்ற தொழில்நுட்பங்களின் வெளிப்பாட்டை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்