ஹைதராபாத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான க்ரீன் ரோபோட்டிக்ஸ் (Grene Robotics) என்ற நிறுவனமானது இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ’இந்திரஜால்’ எனப் படும் ஆளில்லா ஒரு விமான எதிர்ப்புக் கவச அமைப்பினை வடிவமைத்துக் கட்டமைத்துள்ளது.
இந்தக் கவச அமைப்பானது 1000 முதல் 2000 ச.கி.மீ. வரையிலான பரப்பளவை தனித்துப் பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
வான்வழி ஆபத்துகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் வான்வழி தாக்குதல்களிலிருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது.
ஆளில்லா வான்வழி விமானங்கள், வெடிபொருள் ஆயுதங்கள், மற்றும் குறைந்த ரேடார் வரம்புடைய குறுக்கு வெட்டு இலக்குகள் போன்றவை வான்வழியிலான ஆபத்துகளாகும்.