இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான கூட்டுப் பயிற்சியான இந்திரா - 2018 உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்றது.
இது இந்திய மற்றும் ரஷ்ய இராணுவங்களுக்கிடையேயான இயங்குத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பயிற்சியான இந்திராவின் 10-வது பயிற்சியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவின் கீழ் அமைதி காத்தல் / அமைதி அமலாக்க சூழ்நிலையில் இரண்டு இராணுவத்திற்கிடையேயான இயங்குத்தன்மைகளை மேம்படுத்துவதற்காக கூட்டாகத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதலைப் பயிற்சி செய்வதே இதன் நோக்கமாகும்.