அரசுப் பொது ஒளிபரப்பு நிறுவனமானது, பிரசார் பாரதி இந்துஸ்தான் சமாச்சார் (HS) நிறுவனத்துடன் இணைந்து தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி (AIR) நிறுவனம் ஆகியவற்றிற்குச் செய்தி உள்ளீடுகளை வழங்குவதற்கான இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் பிரசார் பாரதி நிறுவனத்திற்கு 10 தேசியச் செய்திகளும், பிராந்திய மொழிகளில் 40 "உள்ளூர்" செய்திகளும் உள்ளடங்கும் வகையில் ஒவ்வொரு நாளும் 100 செய்திகள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பிரசார் பாரதி நிறுவனமானது, இந்திய செய்தித் தாள்களின் ஒரு இலாப நோக்கற்றக் கூட்டுறவு நிறுவனமான இந்தியப் பத்திரிகை அறக்கட்டளைக்கான (PTI) சந்தாவை 2020 ஆம் ஆண்டில் ரத்து செய்தது.
இந்துஸ்தான் சமாச்சார் நிறுவனமானது 1948 ஆம் ஆண்டில் M.S.கோல்வால்கர் என்பவருடன் இணைந்து ஷிவ்ராம் ஷங்கர் ஆப்தே அவர்களால் நிறுவப்பட்டது.