இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனத்தின் சந்தைப் படுத்துதலுக்கான முதல் வெளிநாட்டு அலுவலகம்
August 24 , 2022 1121 days 512 0
இந்துஸ்தான் வானூர்தியியல் நிறுவனமானது (HAL) கோலாலம்பூரில் தனது முதல் சர்வதேசச் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அலுவலகத்தை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தேஜாஸ் எனும் ஒரு இலகுரக போர் விமானத்தினை மலேசியா கொள்முதல் செய்திடச் செய்வதற்கான சாத்தியமான ஒப்பந்தத்தை எதிர்நோக்கி இந்த ஒப்பந்தமானது மேற் கொள்ளப்பட்டது.
தேஜாஸ் விமானம் ஆனது மலேசிய விமானப்படைக்கான போர் ரக மேம்பட்ட பயிற்சி (FLIT) விமானமாக மலேசிய அரசினால் கருதப்படுகிறது.