இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது ‘இந்துஸ்தான் – 228’ எனும் பயணிகள் விமானத்தினை உருவாக்குவதற்காக அதன் தரைகளச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
UDAN எனும் ஒரு பிராந்திய இணைப்புத் திட்டத்தினை ஆதரிக்கும் நோக்கோடு இந்துஸ்தான்–228 விமானமானது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானமானது மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையே என்ற வகையிலான விமானப் போக்குவரத்திற்காக விமான இயக்குநர் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் பயன்படுத்தப் படும்.
இந்துஸ்தான் நிறுவனமானது அரசிற்குச் சொந்தமான ஒரு விமானம் மற்றும் பாதுகாப்புசார் நிறுவனமாகும்.