அறிவியலாளர்கள் இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கற்கருவிகளைக் கண்டறிந்துள்ளனர்.
1.48 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது வாலேசாவில் ஆரம்ப கால மனித இருப்பைக் குறிக்கிறது.
சிறிய விலங்குகளை வெட்டவும், பாறைகளைச் செதுக்கவும் இந்தக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன.
கடல் பயணத்தில் இருந்த வரம்புகள் காரணமாக ஹோமோ எரெக்டஸ் வாலேசியன் தீவுகளில் 1.02 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் குடியேறினர் என்ற முந்தைய கோட்பாடுகளை இந்தக் கண்டுபிடிப்புகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.
வாலேசியா என்பது கிழக்கு இந்தோனேசியாவில் போர்னியோ, ஜாவா, ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா இடையே அமைந்த, இயற்கை ஆர்வலர் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸின் பெயரால் பெயரிடப்பட்ட ஒரு பகுதியாகும்.