TNPSC Thervupettagam

இந்த்ஸ்பேஸ்எக்ஸ் (IndSpaceEx) – முதலாவது விண்வெளிப் போர்ப் பயிற்சி

July 25 , 2019 2119 days 649 0
  • இந்திய ஆயுதப் படைகள் நாட்டின் முதலாவது உருவகப்படுத்தப்பட்ட விண்வெளிப் போர்ப் பயிற்சியான “இந்த்ஸ்பேஸ்எக்ஸ்” என்ற பயிற்சியை நடத்தத் தயாராகியுள்ளன.
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட முப்படை பாதுகாப்புப் பணியாளர்களுடன் அனைத்து இராணுவ மற்றும் அறிவியல்துறை சார்ந்த பங்காளர்கள் இப்பயிற்சியை நடத்த இருக்கின்றனர்.
  • இந்த ஆண்டில் மார்ச் 27 அன்று செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • கண்காணிப்பு, தகவல் தொடர்பு, ஏவுகணை குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் துல்லியமான இலக்கு ஆகியவற்றிற்குப் பயனளிப்பதாக விளங்கும் இந்திய செயற்கைக் கோள்களை அழிக்க அல்லது செயலிழக்கச் செய்யும் எதிரி நாடுகளின் முயற்சிகளுக்குத்  தடை ஏற்படுத்துவதற்கு இது போன்ற திறன் தேவையானதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்