ஐக்கிய நாடுகள் அவையானது இன நீதி மற்றும் சமத்துவம் குறித்த தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்டு கொல்லப்பட்டது போன்ற அட்டூழியங்கள் திரும்பத் திரும்ப நிகழாமல் தடுப்பதற்கு வேண்டி உலகம் முழுவதுமுள்ள கருப்பின மக்களுக்கு எதிரான உள்ளார்ந்த இனவெறியினை உடனடியாக அகற்றுவதற்கு இது அழைப்பு விடுத்துள்ளது.
ஃப்ளாய்டு என்பவரின் மரணத்தின் விளைவாக ஐ.நா.வின் இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
இவர் டெரக் சாவின் எனும் அமெரிக்க காவல் துறை அதிகாரியால் கொலை செய்யப் பட்டார்.