இனப் படுகொலை குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியத்தினைப் போற்றுதல் மற்றும் இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 09
December 13 , 2022 878 days 266 0
மனிதனுக்கு எதிராக மனிதனால் இழைக்கப்படும் மிகப்பெரியக் குற்றம், மனித உரிமை மீறல் மற்றும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று, முதல் மனித உரிமைகள் சார்ந்த உடன்படிக்கையான இனப் படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை குறித்த ஒரு உடன்படிக்கையினை (இனப்படுகொலை ஒப்பந்தம்) ஏற்றுக் கொண்டது.
2022 ஆம் ஆண்டானது இந்த உடன்படிக்கையின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
2015 ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தினை இயற்றியதன் மூலமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தத் தினத்தினை ஏற்றுக் கொண்டது.