இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு தினம் 2025 - டிசம்பர் 09
December 12 , 2025 13 days 44 0
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவித்து நினைவு கூர்வதும், உலகளாவிய தடுப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த நாள் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையால் அனுசரிக்கப் பட்டது.
இனப்படுகொலையை வரையறுக்கும் மற்றும் அதைத் தடுக்கவும் தண்டிக்கவும் உலக நாடுகளுக்கு கடமை நிர்ணயிக்கும் 1948 ஆம் ஆண்டு ஐ.நா. இனப்படுகொலை உடன்படிக்கையுடன் இந்த நாள் ஒத்துப் போகிறது.
இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இனக்குழு, இன அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களை உள்ளடக்கியது, இதில் கொலை, தீங்கு விளைவித்தல் மற்றும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுதல் ஆகியவை அடங்கும்.