இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோரின் சர்வதேச நினைவு மற்றும் மரியாதை செலுத்து தினம் - டிசம்பர் 09
December 12 , 2023 746 days 269 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று தீர்மானத்தின் மூலம் இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டது.
1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கை ஆனது, சர்வதேச சட்டத்தில் முதன் முறையாக இனப்படுகொலை குற்றத்தைச் சேர்த்தது.
இன்று வரை, 153 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “உலக சமுதாயத்தில் இன்றும் உள்ள சக்தி: இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் குறித்த 1948 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் மரபு” என்பதாகும்.