இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் – 8வது முறையாக செவ்வாயில் பறந்தது
June 27 , 2021 1514 days 665 0
நாசாவின் செவ்வாய்க் கிரகம் மீதான சோதனை முறை ஹெலிகாப்டரான இன்ஜெனியூட்டி அதன் பரப்பில் எட்டாவது முறையாகப் பறந்துள்ளது.
இன்ஜெனியூட்டி என்பது நாசாவின் 2020 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத் திட்டத்தின் கீழ், செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டு இயங்கி வரும் ஒரு சிறிய எந்திர ஹெலிகாப்டர் ஆகும்.
இது நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் கட்டமைக்கப்பட்டது.
இது முதலில் 5 முறைகள் மட்டுமே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இதன் நிலையான வெற்றியின் மூலம் இத்திட்டத்தினை விரிவுபடுத்தவும் மேலும் பலமுறை பறக்கச் செய்து சோதனை செய்யவும் வேண்டி அது அந்நிறுவனத்திற்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.