இன்டிகாவ் என்பது ஹைதராபாத்திலுள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட உலகின் மிகப்பெரிய கால்நடை மரபணு சில்லு ஆகும்.
இது ஒற்றை நியூக்லியோடைட் பல்லுருத் தோற்றத்தை (Single Nucleotide Polymorphism) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சில்லு ஆகும்.
இது கிர், கான்கிரெஜ், சாஹிவுல், ஓங்கோல் போன்ற உள்நாட்டின் அசல் கால்நடை இன அசல் வகைகளைக் காப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தச்சில்லானது நமது உள்நாட்டு இனங்களை சிறந்த பண்புகளுடன் பாதுகாத்தல் என்ற ஒரு இலக்கை அடைவதற்கான அரசின் திட்டங்களிலும் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் உதவுவதிலும் ஒரு நடைமுறை சார்ந்த பயன்பாட்டினைக் கொண்டிருக்கும்.