TNPSC Thervupettagam

இமயமலை பனிப்பாறை இழப்பு அறிக்கை 2026

March 23 , 2026 4 days 72 0
  • '1990 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்து குஷ் இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறைகளின் மாறும் இயக்கவியல்' என்ற அறிக்கையை சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, 1990 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்து குஷ் இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் அவற்றின் மொத்தப் பரப்பளவில் சுமார் 12%-ஐ இழந்துள்ளன.
  • 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு பனி இழப்பு விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது உலகளாவிய வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதைக் காட்டுகிறது.
  • 1975 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் 27 மீட்டர் வரை பனி தடிமனை இழந்துள்ளன, இது நீண்ட கால வீழ்ச்சியைக் குறிக்கிறது.
  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவுக்கு வெளியே அதிக அளவு பனியைச் சேமித்து வைத்திருப்பதால் இப்பகுதி "மூன்றாவது துருவம்" என்று அழைக்கப்படுகிறது.
  • பனிப்பாறைகள் உருகுவது கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய ஆறுகளைப் பாதித்து, நீர் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்