TNPSC Thervupettagam

இமயமலையில் வேட்டையாடும் மற்றும் வேட்டையாடப்படும் விலங்குகளின் தொடர்பு

November 5 , 2026 2 days 62 0
  • மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கலீலா தேசிய பூங்காவில் அருகிவரும் செந்நிறப் பாண்டாவை (ஐலூரஸ் ஃபுல்ஜென்ஸ்) ஆசிய கருப்பு கரடி (உர்சஸ் திபென்டனுஸ்) வேட்டையாடுவதற்கான முதல் சரிபார்க்கப்பட்ட புகைப்பட ஆதாரத்தை இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
  • ஆசிய கருப்பு கரடியானது, இமயமலை கருப்பு கரடி அல்லது நிலவுக் கரடி (Moon bear) என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது இமயமலை அடிவாரங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ரஷ்ய தூர கிழக்கின் வனப்பகுதிகளில் காணப்படுகிறது.
  • ஆசிய கருப்பு கரடி IUCN செம்பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக (Vulnerable) வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் செந்நிறப் பாண்டா IUCN செம்பட்டியலில் அருகிவரும் இனமாக (Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • சிங்கலீலா தேசிய பூங்கா மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் கிழக்கு இமயமலையில் உள்ள சிங்கலீலா மலையில் அமைந்துள்ளது.
  • இது 78.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அதன் மேற்கு எல்லையை நேபாளத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்