நிலப் பதிவை நவீனமயமாக்குவதற்காக இமாச்சலப் பிரதேச மாநில அரசானது 'My Deed' NGDRS (தேசியப் பொது ஆவணப் பதிவு முறை) என்ற முன்னெடுப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
இந்த அமைப்பு ஆனது இயங்கலை மூலம் சொத்துப் பதிவை அனுமதிப்பதன் மூலம், குடிமக்கள் அதன் இறுதி நடவடிக்கைக்காக என்று ஒரு முறை மட்டுமே தாலுக்கா அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய வசதியை உருவாகியுள்ளது.
பிலாஸ்பூர் சதார், டல்ஹவுசி, புந்தர் மற்றும் ராஜ்கர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 10 தாலுகாக்களில் இந்த முன்னெடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய எண்ணிம சீர்திருத்தங்களில் எளிமையான இந்தி மொழியில் புதிய ஜமாபந்தி வடிவ, இணைய வழி ரோஸ்னாம்சா வாக்யாதி (எண்ணிம பட்வாரி நாட்குறிப்பு) மற்றும் கார்குசாரி (இயங்கலை பணி அறிக்கையிடல்) ஆகியவை அடங்கும்.
கூட்டு நில உரிமையில் உள்ள சில சர்ச்சைகளைக் குறைக்க 'ஒற்றை கட்டா, ஒற்றை உரிமையாளர்' மாதிரியைச் செயல்படுத்தி, 'காங்கி தக்சீம்' என்ற திட்டத்தை குறுகிய கால அடிப்படையில் செயல்படுத்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.