இந்தியா மியான்மர் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு இராணுவப் பயிற்சியான இம்பெக்ஸ் 2018-19 என்பதின் இரண்டாவது பதிப்பானது ஹரியானாவில் உள்ள சாந்தி மந்திர் இராணுவ நிலையத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமானது ஐ.நா.வின் கீழ் அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்காக மியான்மர் இராணுவத்தினரை பயிற்றுவிப்பதாகும்.
இந்திய ராணுவமானது ஐ.நா. அமைப்பின் நடவடிக்கைகளில் பணியாற்றுவதில் அதிக அனுபவங்களைக் கொண்டது. மேலும் உலகளவிலான அமைப்பில் அதிக அளவில் வீரர்களை அளிக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது.