அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள ஷெர்கானில் இம்பேடியன்ஸ் இராஜிபியானா என்ற ஒரு புதிய பால்சம் மலர்/காசித் தும்பை மலர் இனம் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஷெர்காவ்ன் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது.
இந்தத் தாவரம் ஆனது பிரகாசமான பூக்கள் மற்றும் வெடித்தல் மூலமான விதைப் பரவல் வழிமுறைகளுக்கு பெயர் பெற்ற இம்பேடியன்ஸ் இனத்தைச் சேர்ந்தது.
இந்தியாவில் சுமார் 230 பால்சம் இனங்கள் உள்ளன என்பதோடுஇதில் இம்பேடியன்ஸ் பால்சமினா போன்ற பூர்வீக மற்றும் அலங்கார மலர் வகைகள் உள்ளன.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்ட முந்தைய கண்டுபிடிப்புகளில் இம்பேடியன்ஸ் காட்ஃப்ரேய் மற்றும் இம்பேடியன்ஸ் சஷின்போர்த்தகுரி ஆகியவை அடங்கும்