TNPSC Thervupettagam

இயங்கலை சொத்து பதிவு - ஸ்பிரிண்ட் 1

January 25 , 2026 14 hrs 0 min 29 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொத்துப் பதிவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க ஸ்பிரிண்ட் 1 தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • ஸ்பிரிண்ட் 1 ஆனது STAR 3.0 (எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான பதிவு நிர்வாகம்) அமைப்பின் கீழ் தொடங்கப்பட்டது.
  • இது நேரடி ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் 30 பத்திர வகைகளுக்கும் காகிதமில்லா பதிவை வழங்குகிறது.
  • விற்பனை மற்றும் குத்தகை பத்திரங்கள் உட்பட 10 ஆவண வகைகளுக்கு இருப்பு இல்லாத பதிவு கிடைக்கிறது.
  • குடிமக்கள், துணைப் பதிவாளர் அலுவலகத்தை (SRO) பார்வையிடாமல் இயங் கலையில் முழுமையான பதிவு செயல் முறையையும் முடிக்கலாம்.
  • TNREGINET வலை தளம் மற்றும் கைபேசி செயலி மூலம் இந்தச் சேவைகள் கிடைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்