TNPSC Thervupettagam

இயங்கலை வழி தேசிய மருந்து உரிம வழங்கீட்டு அமைப்பு

October 29 , 2025 15 hrs 0 min 21 0
  • மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆனது, இயங்கலை வழி தேசிய மருந்து உரிம வழங்கீட்டு அமைப்புத் (ONDLS) தளத்தில் ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அமைப்பு ஆனது அதிக ஆபத்துள்ள மருந்து கரைசல்களின் விநியோகச் சங்கிலி மற்றும் தரத்தைக் கண்காணிக்கிறது.
  • மத்தியப் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு காரணமான டைஎத்திலீன் கிளைக்கால் (DEG) கொண்ட கலப்படமான இருமல் நிவாரணிகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
  • அதிக ஆபத்துள்ள கரைசல்களில் கிளிசரின், புரோப்பிலீன் கிளைக்கால், மால்டிடோல், சர்பிடால், பாலிஎத்திலீன் கிளைக்கால், பாலிசார்பேட்டுகள் மற்றும் சில ஆல்கஹால்கள் அடங்கும்.
  • கரைசல் உற்பத்தியாளர்கள் ONDLS அமைப்பில் பதிவு செய்து, உற்பத்தித் தொகுதி சார்ந்தத் தரவைப் பதிவேற்ற வேண்டும் என்பதோடு, மேலும் சந்தை வெளியீட்டிற்கு முன் உரிமங்களைப் பெற வேண்டும்.
  • முறையான உற்பத்தி நடைமுறை (GMP) மற்றும் உலக சுகாதார அமைப்பு-GMP (WHO-GMP) போன்ற சான்றிதழ்கள் உட்பட உற்பத்தி மற்றும் விற்பனை உரிமங்களை செயலாக்குவதையும் இந்தத் தளம் ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்