TNPSC Thervupettagam

இயங்கலை வழி விளையாட்டுகள் தொடர்பான மசோதா 2025

August 23 , 2025 6 days 54 0
  • 2025 ஆம் ஆண்டு இயங்கலை வழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவானது இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா பணம் கொண்டு விளையாடப்படும் இயங்கலை வழி விளையாட்டுகளின் செயல்பாடு, வசதி மற்றும் விளம்பரத்தை தடை செய்கிறது.
  • இயங்கலை வழி பண விளையாட்டுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் / அல்லது 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்தச் சட்டம் முயல்கிறது.
  • இயங்கலை வழி கற்பனை/ஃபேன்டஸி விளையாட்டுகள் முதல் இயங்கலை வழி சூதாட்டம் (போக்கர், ரம்மி மற்றும் பிற சீட்டாட்டம் போன்றவை) மற்றும் இயங்கலை வழி குலுக்கல் பரிசுச் சீட்டு வரை அனைத்து இயங்கலைவழி பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளையும் இந்த மசோதா தடை செய்கிறது.
  • இது இயங்கலை வழிப் பண விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களைத் தடை செய்ய முயல்வதோடு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அத்தகைய விளையாட்டுகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்வதைத் தடுக்கிறது.
  • இந்திய விளையாட்டுகள் சந்தை 3.8 பில்லியன் டாலர் மதிப்புடையது மற்றும் 2029 ஆம் ஆண்டிற்குள் அது 9.2 பில்லியன் டாலராக அதிகரிக்கக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்