இயங்கலையில் பரவும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான கட்டமைப்பு
July 10 , 2024 392 days 283 0
தகவல் ஒருமைப்பாட்டிற்கான உலகளாவிய கோட்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
இந்த விரிவான கட்டமைப்பானது எண்ணிம உலகில் பரவும் பல தவறான தகவல், தொடர்பற்ற தகவல் மற்றும் வெறுப்பினை உண்டாக்கும் கடும் பேச்சு ஆகியவற்றால் ஏற்படும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனித உரிமைகளை நிலைநிறுத்துகின்ற மற்றும் அமைதியான சமூகங்கள் மற்றும் நிலையான எதிர்காலத்தை மேம்படுத்துகின்ற வளமான மற்றும் பாதுகாப்பான தகவல் அளிப்பு சூழல்களை உருவாக்குவதை இந்தக் கொள்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.